Tuesday, May 8, 2018

கையடக்கத்தொலைபேசியின் கதிர்வீச்சு | Cell Phone Radiation......

  tamil tech News       Tuesday, May 8, 2018
கையடக்க தொலைபேசி ஒன்றினை கொள்வனவு செய்யும் போது கவனிக்கவேண்டிய முக்கிய விடயம் என்ன?


SAR Value
SAR Value என்றால் கையடக்க தொலைபேசியில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சின் அளவு ஆகும்.
கையடக்க தொலைபேசியில் இருந்து வெளிவரும் கதிர் வீச்சினால் பல வகையான உடல் நல பாதிப்புகள் ஏற்படும்.

மனிதனின் தலைப்பகுதி மண்டை ஓட்டினால் ஆக்கப்பட்டிருப்பதால் SAR Value தலைப்பகுதிக்கு குறைந்த பாதிப்பையும், மற்றைய உடலின் பாகங்களிற்கு அதிகமான பாதிப்பையும் ஏற்படுத்தும். இதனால் தலைப்பகுதிக்கு வேறாகவும், உடற்பகுதிக்கு வேறாகவும் SAR Value கணிக்கப்படுகின்றது. இந்த SAR Value ஆனது ஐரோப்பிய நாடுகளுக்கு வேறாகவும அமெரிக்கா நாடுகளுக்கு கணிக்கப்படுகிறது.

முக்கிய குறிப்பு

குழந்தைகளிடம் தொலைபேசிகளை அவர்களிற்கு அருகில் விளையாட்டு பொருட்களாக கொடுத்தல் கூடாது. ஏனென்றால் குழந்தைகளின் உடல் அமைப்பானது வயது வந்தவர்களைவிட மிகவும் மென்மையானது, அதனால் கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்பு பலமடங்கு அதிகமாக இருக்கும். கர்ப்பிணி தாய்மார்களும் குழந்தைகளுக்கு ஈடானவர்கள். ஏனென்றால் அவர்களின் வயிற்றில் உள்ள சிசுவும் குழந்தைகளை விட மிகவும் மென்மையானது.
WiFi, Network இணைப்புகள் துண்டிக்கப்பட்ட Airplane Mode இல் உள்ள தொலைபேசிகள் கதிர்வீச்சினை வெளியிடாது. அதனால் Airplane mode இல் உள்ள தொலைபேசிகள் பாதிப்பற்றவை. குழந்தைகளிடம் தொலைபேசிகளை அவர்களிற்கு அருகில் விளையாட்டு பொருட்களாக கொடுக்கும் பொழுது தொலைபேசிகளை Airplane Mode இல் மாற்றுதல் அவசியமாகும்.
SAR Value குறைவாக உள்ள தொலைபேசிகளை தெரிவுசெய்து கொள்வனவு செய்யவேண்டும்.
SAR Value இனை அறிந்து கொள்வதற்கு Google தேடலில் SAR Value இனை அறிந்து கொள்ள வேண்டிய தொலைபேசியின் ரகத்தின் Model
SAR Value என்று தேடும் போது அத்தொலைபேசியின்
SAR Value வீதத்தினை அறிந்து கொள்ள முடியும்.
உதாரணம் :- Nokia 2 SAR Value என்று தேட வேண்டும்


SAR Value இனை திருத்தமாக அறிந்துகொள்வதற்கு சிறந்த இணையத்தளம் உள்ளது.
இணையத்தினுள் செல்வதற்கு பின்வரும் இணைப்பை அழுத்துங்கள்.
Device Specifications
இவ்விணையத்தளத்தில் தொலைபேசியின் SAR Value இனை அறிந்துகொள்ளும் போது இத்தொலைபேசியின் மேலும் கீழும் இதைவிட குறைந்த கூடிய SAR Value உள்ள தொலைபேசிகள் வரிசையாக இருக்கும்.
உதாரணம் - Nokia 2 SAR Value
logoblog

Thanks for reading கையடக்கத்தொலைபேசியின் கதிர்வீச்சு | Cell Phone Radiation......

Previous
« Prev Post

No comments:

Post a Comment